divya prabanda vaguppu
எனக்கு மிகவும் பிடித்த மொழி தமிழ். அதிலும் ஆழ்வார்கள் பிரபந்தம் என்றால் ரொம்ப பிடிக்கும். சிறிய வயதில் பிரபந்தம் கற்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது திருமலை ஈச்சம்பாடி ஸ்ரீ. உ வே. வீரரகாவச்சரியர் சுவாமி மதுராந்தகம் கோவிலில் திர்தகாரராக இருந்தார். மிகவும் அன்பு கொண்டவர். குழந்தைகளுக்கு பிரபந்தம் கற்பிக்க வேணும் என்று ஒவ்வொரு வீடாக சென்று குழந்தைகளை அழைத்து வருவார். காலை 6 மணி முதல் 7.15 வரை பிரபந்த வகுப்பு. எனக்கு அப்போது 9 வாடு இருக்கலாம். ந்ஜாபகம் இல்லை. திருமடல், திருப்பாவை, அமலனாதிபிரான், பெரியாழ்வர் திருமொழி, மற்றும் இதர முக்கியமான பிரபந்தங்களை கற்பித்தார். பாசுரங்களுக்கு ஏற்ப கடைகள் சொல்லுவார். எனக்கு அத்து ரொம்ப பிடிக்கும். கதைகளை நன்கு ஊன்று கவனிப்பேன். கோவிலில் பாராயணம் போது எங்களை தவறாமல் வரசொல்லுவார். பல சமயங்கள் மிகவும் ஏன் ஜ்னாபகத்தில் உள்ளன. முதலில் பல்லாண்டு 10 பாசுரம் சேவித்தது. அப்போது கொடி ஏறி முதல் நாள். உடையவர் சந்நிதி வாசலில் பல்லாண்டு தொடக்கம். நானு...