divya prabanda vaguppu

              எனக்கு மிகவும் பிடித்த மொழி தமிழ். அதிலும் ஆழ்வார்கள் பிரபந்தம் என்றால் ரொம்ப பிடிக்கும். சிறிய வயதில் பிரபந்தம் கற்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது திருமலை ஈச்சம்பாடி ஸ்ரீ. உ வே. வீரரகாவச்சரியர் சுவாமி மதுராந்தகம் கோவிலில் திர்தகாரராக இருந்தார். மிகவும் அன்பு கொண்டவர். குழந்தைகளுக்கு பிரபந்தம் கற்பிக்க வேணும் என்று ஒவ்வொரு வீடாக சென்று குழந்தைகளை அழைத்து வருவார். காலை 6 மணி முதல் 7.15 வரை பிரபந்த வகுப்பு. எனக்கு அப்போது 9 வாடு இருக்கலாம். ந்ஜாபகம் இல்லை. திருமடல், திருப்பாவை, அமலனாதிபிரான், பெரியாழ்வர் திருமொழி, மற்றும் இதர முக்கியமான பிரபந்தங்களை கற்பித்தார். பாசுரங்களுக்கு ஏற்ப கடைகள் சொல்லுவார். எனக்கு அத்து ரொம்ப பிடிக்கும். கதைகளை நன்கு ஊன்று கவனிப்பேன். 
            கோவிலில் பாராயணம் போது எங்களை தவறாமல் வரசொல்லுவார். பல சமயங்கள் மிகவும் ஏன் ஜ்னாபகத்தில் உள்ளன. முதலில் பல்லாண்டு 10 பாசுரம் சேவித்தது. அப்போது கொடி  ஏறி முதல் நாள். உடையவர் சந்நிதி வாசலில் பல்லாண்டு தொடக்கம். நானும் முதல் முறையாக கலந்து கொண்டு பல்லாண்டு சேவித்தேன். அடுத்தது திருப்பாவை பாராயணம். மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் கோவிலில் சென்று பாராயணம் செய்ய வேணும். செய்து விட்டு வீட்டுக்குச்சென்று குட்டி தூக்கம் போட்டு பிறகு சாற்றுமுரைக்கு வருவோம் கடைசியில் எங்களை கூப்பிட்டு பொங்கல் கொடுப்பார். நீங்கள் திருப்பாவை பாராயணம் செய்தீர்கள் அல்லவா? அதான் ஆண்டாள் கொடுத்தாள்  - என்பார் சிரித்துக்கொண்டே. நாளைக்கும் வாருங்கள் ஆண்டாள் கொடுப்பாள் என்று. எப்போதும் பெரியவர்களே அம்மாதிரி பிரசாதம் வாங்கி பார்த்தது, இப்போது சிறிய பையனான நான் வாங்கும் போது,  ஒரு பெருமை. தவறாமல் கலந்து கொள்வேன்.  
            வெள்ளிக்கிழமைகளில் சிறிய திருமடல் சொல்வதற்கு எங்களை கூப்பிட்டுச் செல்வார். நாங்கள் சுமார் 20 பேர் உரக்க சிறுவர்கள் சொல்லுவோம். எனக்கு இன்னும் அவர் முகம் நினைவில் இருக்கிறது. எங்கள் ஒவ்வொருவரையும் பார்பார். குறைவான குரலில் சொல்லும் குழந்தையை பார்த்து கை அசைத்து உரக்கச் சொல் என்று கை சமிஞை செய்வார். அன்றும் எங்களுக்கு கடைசியில் தவறாமல் பிரசாதம் தருவார். சிறிது அளவு தான்.... ஆனால் அதை பலர் நடுவில் வாங்கும் போது, அந்த சிறிய வயதில் ஒரு பெருமிதம். இப்போது அது இல்லை. 
             இதில் மூத்தவர்கள் இளையவர்கள் என்று இரு பிரிவாக வகுப்பு எடுத்தார். ஒவ்வொன்றிலும் சுமார் 10 பேர் இருந்தோம்.  எங்களுக்குள் போட்டி வைத்தார். டிவிஎஸ் கம்பனியில் இருந்து முதல் ஆயிரம் புத்தகம் வாங்கி கொடுத்தார். இது ஏன் பழைய நினைவு. 
            இப்படியாக எனது பிரபந்தம கற்கும் வாய்ப்பு நடை பெற்றது. எம்புரமானின் கட்டளை. எங்கள் பிரபந்த ஆசான் பரமபதம் சென்று விட்டார்.. அப்போது விட்டுப்போனது பிரபந்தம் கற்கும் வாய்ப்பு.. மீண்டும் பல வருடங்கள் கழித்து எம்பெருமான் எங்களை மீண்டும் கடாக்ஷம்  செய்தான்.. அதுவும் சிறிது நாள் தான். அடுத்த கடிதத்தில்..  
வில்லியம்பாக்கம் கோவிந்தராஜன் 
எனது முயற்சியில் பல மயில் கல் உள்ளது என்பது எனக்கு தெரியும். இது ஒரு தொடக்கமே. என்னால் முடிந்ததை நான் செய்து கொண்டு வருகிறேன். எனக்கு எப்போதும் சிலர் பக்க பலமாக நின்று உதவி செய்து கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு என் வனம்மம் மற்றும் நன்றி.
டா. கோவிந்தராஜன்
kalidasakendram@yahoo.com
video link :
வணக்கம், காளிதாச என்கிற இந்த புதிய ப்ளாக் வடமொழி என்று பிரசித்தியான மொழியை கற்பதற்கும் கற்பிப்பதற்கும் ஏற்படுத்தப் பட்ட ஒன்று. காளிதாச யாஹூ குழுமத்தில் வெளியிட்ட சம்ஸ்கிருத பாடங்கள் இங்கே வெளியிடப்படும். இதை முறையாக கற்கவும். உங்கள் பதில்களை kalidasakendram@yahoo.com என்கிற ஈமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும். நன்றி.
கோவிந்தராஜன்
போன் : 98404-87100

Sethu Snana vidhi

समुद्रस्नान विधि: समुद्रतीरं गत्वा कुसुमाक्षतैरभ्यर्च्य नमस्ते सलिलेशाय नमो गम्भीरमूर्तये | नमो मेघनिनादाय नमस्ते परमात्मने || विविध...