பகவான் ப்ரதமாசார்யனாகவும் அவன் முதற்கொண்டு பெருகி வரும் நம் ஆசார்ய
பரம்பரையின் பெருமையை எழுதுவதற்கு நம் வார்த்தைகள் போதா. தாய்க்குருவி தம்
குஞ்சுக்குகளுக்கு உணவை பதப்படுத்தி ஊட்டுவது போல் நம் பூர்வாசார்யகளின் ஸூக்திஸாரங்களை நாம் அறியும்படி ஊட்டுமவர்கள் நம் ஆசார்யர்கள்.
ஆசார்யனுக்கு பண்டிதன் பாமரன் என்கிற பேதம் கிடையாது. ஆசார்ய கடாக்ஷத்தினால்
எவ்வாறு நம் பாபங்கள் தொலைந்து பகவானின் ஸம்பந்தம் கிடைக்கின்றதோ, அதுபோல்
அஜ்ஞானம் தானாகவே ஒழிந்து ஸத்ஜ்ஞானம் பிறக்கும். ஆசார்யனின் ஜ்ஞானமானது ஸத்யமானது,
நமது கலங்கிய மனதை தெளிவுபடுத்துவது
மற்றும் பூர்வாசார்யர்களின் ஸம்பந்தமுடையது. இந்த ஜ்ஞானம் தர்கவாதிகளுக்கும்
குயுக்தி பண்ணுமவர்களுக்கும் கிட்டாது. அவ்வாறு ஆசார்ய ஸம்பந்தத்தாலும் அவரிடமுள்ள
பக்தியாலும், ஆசார்யனுடைய அனுக்ரஹத்தினாலும் ஜ்ஞானம் பெற்றவன் ஆசார்யன் பக்கலிலேயே
இருந்துகொண்டு அவருக்கு ஸேவைகளைச் செய்து கொண்டு மேன்மேலும் கைங்கர்யங்ளைச் செய்து
கொண்டு ஜ்ஞானத்தை ஸம்பாதிக்க வேணும். தன்னால் இயன்றவரை ஆசார்யனின் ப்ரபாவங்களை
ப்ரகாசிப்பிக்கச் செய்ய வேணும். இப்படியாக அநவரதம் இந்த தேஹபாதபர்யந்தம் ஆஜ்ஞா-அனுஜ்ஞா
கைங்கர்யங்களைச் செய்து கொண்டு வரவேண்டும்.
![]() |
நாவல்பாக்கம் அக்ரஹாரம் |
இந்த ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம் எனும் ஆகாசத்திலே எத்தனை
எத்தனையோ ஆசார்யர்கள் நக்ஷத்ரங்களைப் போல் ஜ்வலிக்கின்றனர். இதில்
ஸப்தர்ஷிமண்டலமாக ஜ்வலிப்பவர்கள் நம் சடகோபன்-நாதமுனிகள்-உய்யக்கொண்டார்-மணக்கால்
நம்பி-ஆளவந்தார்-பெரியநம்பி மற்றும் பாஷ்யகாரர். இவர்கள் எழுமரும் நமது
ஸ்ரீவைஷ்ணவத்திலே மிகவும் ப்ரகாசமாக
ஜ்வலிக்கின்ற ஸப்தர்ஷி மண்டலம். இதில் த்ருவநக்ஷத்ரமாயிருந்து வழியிழந்தோர்க்கு
வழிகாட்டுபவர்கள் ஸ்வாமி தேசிகனும்
அவருடைய ஸூக்திகளும். சாஸ்த்ரங்கள் எனும் ஸூர்யனிடமிருந்து ப்ரகாசத்தைப் பெற்று நமக்கு வழங்கும் சந்த்ரன் போன்றவர்கள் நம்
ஆசார்யர்கள். அவர்களின் வரிசையையும் அவர்களின் பெருமைதனையும் பேசிக்கொண்டே
போகலாம்.
![]() |
நாவல்பாக்கம் ஸ்ரீனிவாச பெருமாள் |
இவ்வாறு சேதனர்களை உய்விக்கப் பிறந்த ஆசார்யர்களிலே
ஸமீபகாலத்தில் தோன்றிய ஆசார்யார்களில் மிகவும் போற்றத்தக்கவர் நம் ஐயா ஸ்வாமி.
தாளம் வழங்கி தமிழ் மறை இன்னிசை தந்த வள்ளலாம் ஸ்ரீமந்நாதமுனிகள் நமக்கு இட்டுச்
சென்ற மற்றொரு நிதி அவரின் வம்ச பரம்பரையும் அந்தச் சிறந்த வம்சத்தில் பிறந்து அதை மேலும் பெருமையடையச் செய்த நம்
ஆசார்யஸார்வபௌமர் ஸ்ரீ உ.வே. ஐயா ஸ்வாமியும்.
நம் ஸ்வாமி ஜம்பூபுரம் எனும் நாவல்பாக்கம் சுரோத்ரிய
க்ராமத்திலே அவதாரம் செய்தார். ஸ்வாமியின் திவ்யகல்யாண குணங்கள் அநேகம். சுமார் 50
வருடங்கள் தன்
க்ராமத்திலிருந்து ப்ரயாணப்படாமல் ஸ்ரீநிவாஸனின் கைங்கர்யத்திலும், ஆசார்யகத்திலும்
ஈடுபட்டிருந்தார் ஸ்வாமி. “வாசுதேவ: சர்வமிதி ஸ மஹாத்மா” என்று ஸ்வாமி தன் குலதனமான ஜம்பூபுரநாதனையே எப்போதும்
ஆராதித்து வந்தவர். நித்யாக்நிஹோத்ரியாக இருந்தவர், வ்ரதத்தில் த்ருடமானவர், ஸெளலப்யர், எப்பொழுதும் தம் குளிர்ந்த
கடாக்ஷத்தினால் சிஷ்யர்கள் அனைவரையும் அனுக்ரஹிப்பவர். அவருடைய அனுக்ரஹத்தினாலும்
திவ்யகடாக்ஷத்தாலும் ஜ்ஞானம் பெற்று தேஜஸ்விகளாக விளங்குபவர்கள் இன்றும் அநேகம்
பேர் உள்ளனர்.
க்ரந்தாவலோகநமில்லாமல் இதமித்தமென்று ஸாதிப்பதில் ஸ்வாமிக்கு நிகர் யாவருமில்லை. ஸ்வாமியிடத்தில் அந்தேவாஸிகளாய் இருந்த பாக்யசாலிகளில் அடியேனும் ஒருவன். ஸ்ரீவத்ஸவம்சத்தில் தோன்றிய ஸ்வாமியினுடைய தேவிகளும் ஸ்வாமிக்கு ஸஹதர்மசரியாய் இருந்து ஸ்வாமியினுடைய நித்யாக்னிஹோத்ரங்களிலும், த்ருடவ்ரதத்திலேயும் உறுதுணையாய் இருந்தவர். இப்படிப்பட்ட திவ்யதம்பதிகளின் குணங்களைக் கேள்விப்பட்டு ஸ்வாமியை ஸேவிக்க த்வரையுடன் வந்தவர்கள் பலர். “வஸ்து பைதாமஹும் தனம்” என்கிற ஸ்வாமி தேசிகனின் வசனப்படி நம் ஸ்வாமியை அனைவராலும் சாக்ஷாத் ஸ்வாமி தேசிகனின் மறுவவதாரமோ என்றும், ஸ்வாமியின் திவ்யகடாக்ஷம் நம் மீது விழாதா என்று ஏங்கிய வித்வான்களின் பட்டியல் மிக நீளம்.
No comments:
Post a Comment