Posts

Showing posts from 2022

Villiampakkam Village

  தனுர்பானபுரம் (வில்லியம்பாக்கம் அக்ரஹாரம்) ஸ்ரீமதே ஸ்ரீஅலர்மேல் மங்கா நாயிகா சமேத ஸ்ரீனிவாச பரப்ரம்மனே நம: ஸ்ரீமதே ஸ்ரீநிகமாந்த மஹாதேசிகாய நம:   ஸ்ரீவைஷ்ணவம் ஆழ்வார்களால் வளம் பெற்று , ஆசார்யர்களால் நன்கு பரவச் செய்யப்பட்டது. ஆழ்வார்களுக்குப் பிறகு ஸ்ரீமந்நாதமுனிகள் தொட்டு மீண்டும் புத்துயிர் பெற்ற நம் சம்ப்ரதாயம் , ஸ்ரீமத் பாஷ்யகாரரின் காலத்தில் சிகரத்தை எட்டியது. திரும்பிய பக்கமெல்லாம் ஸ்ரீமன் நாராயணனின் நாமம் ஒலித்தது. ஸ்ரீவைஷ்ணவர்கள் திரண்டனர். இது தென்னாட்டில் மட்டுமல்ல, மேல் நாட்டிலும் , வடநாட்டிலும் கூட. ஸ்ரீமத் ராமானுஜரின் கைங்கர்யத்தால் சம்ப்ரதாயம் மட்டும் செழிப்படயவில்லை , ஆலயங்களும் செழிப்பைய்ம் மாண்பையும் அடைந்தன.   திருவரங்கம் முதல் திருவேங்கடம், யாதவாத்ரி வரை ஸ்ரீமத் ராமானுஜரின் சீரிய வழிகாட்டலில் எம்பெருமான் அர்ச்சையில் உபய வேதங்களையும் திருச் செவி சாய்த்து ஆனந்தத்தை அடைந்தான். உத்சவாதிகளைக் கண்டருளி பக்தர்களையும் ஆனந்தப் படுத்தினான். ஸ்ரீமத் ராமானுஜரின் காலத்தில் பல ஸ்ரீவைஷ்ணவ குடும்பங்கள் ஸ்ரீரங்கம் , திருவேங்கடம் , மேல்கோட்டை முதலான...